பிரிந்த காதல் ஜோடி: 60 ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகள் முன் திருமணம் - நெகிழ்ச்சி!
இளம் வயதில் பிரிந்த காதல் ஜோடி 60 ஆண்டுகளுக்குப் பின் திருமணம் செய்துள்ளனர்.
பிரிந்த காதல்
பிரிட்டனைச் சேர்ந்தவர் லென்(19). இவர் செவிலி பணிக்காக நியூபோர்ட் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டபோது ஜென்னட்(18) என்பவரைச் சந்தித்துள்ளார். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதலை ஜென்னட்டின் வீட்டார் எதிர்த்துள்ளனர்.
அதனால், ஆஸ்திரேலியா தப்பியோடி வாழாலம் என முடிவெடுத்து இருவரும் ஜோடி மோதிரம் மாற்றியுள்ளனர். தொடர்ந்து, லென் முதலில் ஆஸ்திரேலியா சென்று காதலிக்காக காத்திருந்துள்ளார். ஆனால், ஜென்னட் வீட்டில் இந்த விவகாரம் தெரிந்து அவரை செல்ல அனுமதிக்கவில்லை.
70ல் திருமணம்
எனவே, லென் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை திருமணம் செய்து 3 குழந்தைகளோடு வாழ்ந்துள்ளார். ஜென்னட்டும் பிரிட்டனில் ஒருவரை திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டில் லென் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு காதலியை தேடி வந்து வீட்டை கண்டுபிடித்து அவரையும் சந்தித்துவிட்டார். அப்போது, ஜென்னட் கணவருடன் தான் வாழ்ந்து வந்தார். 2 ஆண்டுகள் கழித்து ஜென்னட் கணவர் புற்றுநோயால் உயிரிழந்தார்.
அதனையடுத்து, 2018ல் இருவரும் ஒன்றாய் வாழ முடிவெடுத்த நிலையில், கொல்லுப் பேர குழந்தைகள் முன்னிலையில் 79 வயதான லென்னும், 78 வயதான ஜென்னட்டும் திருமணம் செய்துகொண்டனர்.