பள்ளி ரி யூனியன்: முதல் காதல் தவிப்பால் 50 வயதில் எஸ்கேப் ஆன ஜோடி!
35 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி ரி யூனியன் நிகழ்ச்சியில் சந்தித்த காதலர்கள் மாயமாகியுள்ளனர்.
ரி யூனியன்
கேரளா, எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 35 ஆண்டுகளுக்குப்பின் அங்கு படித்த மாணவர்களும், மாணவிகளும் சந்தித்துக் கொண்டனர். அதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவரும், இடுக்கி பகுதியை சேர்ந்த மாணவியும் கலந்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் காதலித்துள்ளனர். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து சென்றுள்ளனர். அதன் பின் அவர்களுக்கென் குடும்பம், குழந்தைகள் என்றாகிவிட்டது.
முதல் காதல்
இந்நிலையில், இந்த ரி யூனியன் நிகழ்ச்சியில் இருவரும் முதல் காதலின் நினைவை மறக்க முடியாமல் தவித்தனர். தொடர்ந்து தனியாக பேசத்தொடங்கியுள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் இருவரும் மாயமாகியுள்ளனர்.
இவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் புகாரளித்தனர். அதன் அடிப்படையில், விசாரணையில் இருவரும் சேர்ந்து மாயமாகியது தெரியவந்தது. தற்போது போலீஸார் இவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.