பலமுறை உல்லாசம்.. கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணம் என்றதும் கழட்டிவிட்ட காதலன் - விடாமல் விரட்டி பிடித்த காதலி!

Cuddalore Marriage
By Vinothini Sep 25, 2023 09:00 AM GMT
Report

இளைஞர் ஒருவர் காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார், இவர் ஒரு பி.ஏ பட்டதாரி. இவர் எம்.பரூர் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண் மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார், இவரது கடைக்கு நிதீஷ்குமார் அடிக்கடி சென்றார், அப்பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டது, கடந்த 6 வருடமாக இருவரும் காதலித்து வந்தனர்.

lover-tried-to-escape-after-hearing-her-pregnancy

இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாகலட்சுமி 6 மாத கர்ப்பமானார். இதனால் அந்த பெண் அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார், ஆனால் நிதீஷ் அதனை மறுத்துள்ளார்.

ஆத்திரத்தில் மருத்துவ மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் - கொடூரம்!

ஆத்திரத்தில் மருத்துவ மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் - கொடூரம்!

கரம்பிடித்த காதலி

இந்நிலையில், நாகலட்சுமி விருத்தாசலம் பூவனூரில் உள்ள நிதீஷ்குமார் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார், ஆனால் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் அந்த பெண் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

lover-tried-to-escape-after-hearing-her-pregnancy

இந்த புகாரின் பேரில் நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார். இதனைதொடர்ந்து இருவீட்டாரின் முன்னிலையில் விருத்தாசலம் வண்ண முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார்.

பின்னர் நிதீஷ்குமாரிடம் போலீசார் நாகலட்சுமியிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவைத்தனர்.