Tuesday, May 6, 2025

ஆத்திரத்தில் மருத்துவ மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் - கொடூரம்!

Attempted Murder Death Salem
By Vinothini 2 years ago
Report

இளைஞர் ஒருவர் காதலித்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் கேசவராஜி, இவரது மகள் கோகிலவாணி. இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவருக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாகி மாறியது. இருவரும் வீட்டிற்க்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர்.

youngster-burnt-a-medical-student

இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை போட்டு வந்தனர். சமீபத்தில் இவர் சேலம் ஐந்து ரோட்டில் கோகிலவாணியை, முரளிகிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஜோடுகுளி அருகே புலிசாத்து முனியப்பன் கோயில் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

குடிபோதையில் வந்த கணவர்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!

குடிபோதையில் வந்த கணவர்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம் - அதிர்ச்சி!

கொலை

இந்நிலையில், அங்கு வனப்பகுதிக்குள் பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது முரளிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் ஸ்குரு கழற்ற பயன்படுத்தும் கருவியை கொண்டு கோகிலவாணி கழுத்தில் அவர் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

youngster-burnt-a-medical-student

அப்பொழுது ஆத்திரம் தீராது அந்த பெண்ணின் கணவர் வண்டியில் இருந்த பெட்ரோல் டியூப்பை கழற்றி பெட்ரோலை கோகிலவாணி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து பெங்களூருவுக்கு சென்றுவிட்டார்.

இதனையறிந்த முரளிகிருஷ்ணனின் தாயார் இவரை அழைத்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.