காதலியின் திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளைஞர்

Tirupathur Acidthrewonthegroom onesidelove
By Petchi Avudaiappan Sep 04, 2021 04:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

ஆம்பூரில் காதலித்த பெண்ணின் திருமணத்தை நிறுத்த இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம்.நகர் அருகே உள்ள ஆயிஷா-பி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமீல் அஹமத் என்பவர் அங்குள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி தொழிற்சாலைக்கு சென்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஷமீல் அஹமத் மீது ஆசிட்டை வீசி விட்டு சென்றுள்ளார். இதில் முகம் மற்றும் தோள்பட்டை பகுதியில் ஆசிட் விழுந்து படுகாயமடைந்த ஷமீல் அஹமதுவை அங்கிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஷமீல் அஹமதுவுக்கு 5 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே ஷமீல் அஹமதுவுக்கும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திருமண நடைபெற்று முடிந்தது.

இந்த ஆசிட் வீச்சு சம்பவம் ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுபேர் அஹமது என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஷமீல் அஹமது திருமணம் செய்த பெண்ணின் உறவினர் ஆவார்.

சுபேர் அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக ஷமீல் அஹமத் மீது ஒர்க் ஷாப்பில் இருந்து கேன் மூலம் ஆசிட் வாங்கி வந்து கிட்டதட்ட 3 நாட்கள் அவரை நோட்டமிட்டு வீசி விட்டு சென்றதாக சுபேர் அஹமது காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் சுபேரை ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.