லிவ்-இன் ரிலேஷனில் இருந்த இளம் ஜோடி.. காதலியை குக்கரால் அடித்தே கொன்ற கொடூரம் - இளைஞர் வெறிச்செயல்!
இளைஞர் ஒருவர் தனது காதலியை குக்கரால் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலர்கள்
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தேவா என்ற 24 வயது பெண். இவர் கல்லூரியில் படிக்கும்போதே வைஷ்ணவ் என்ற இளைஞரை காதலித்தார். 29 வயதான வைஷ்ணவ் கொல்லம் பகுதியை சேர்ந்தவர். இருவரும் சேர்ந்து படித்து முடித்ததும் பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர், இவர்கள் மைக்கோ லேஅவுட்டில் அபார்ட்மெண்ட் ஒன்றில் 2 வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார்கள். இச்சமையத்தில் தேவாவிற்கு அடிக்கடி போனில் அழிப்பு வந்துள்ளது, இதனால் அவரது காதலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
கொடூர கொலை
இந்நிலையில், இருவரும் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர், இதனால் ஆத்திரமடைந்த வைஷ்ணவ், நேராக கிச்சனுக்கு சென்று, குக்கரை எடுத்து தேவாவை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அவரது தலையில் மோசமாக தாக்கியதால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனை கண்டு பயந்துபோன அந்த இளைஞர் அங்கிருந்தது தப்பியோடினார். தகவலறிந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அக்கம்பக்கத்தினர், "எந்நேரமும் இருவருக்குள்ளும் சண்டை நடக்கும், அடிதடி சத்தம் அடிக்கடி எங்களுக்கு கேட்கும். இருவருமே இதுகுறித்து இதுவரை போலீசுக்கு சென்று புகார் தந்ததில்லை.
ஆனால், இவர்களின் காதல் விவகாரம் முதல் தகராறுகள் வரை, 2 குடும்பத்தினருக்குமே தெரியும், அவர்களும் அடிக்கடி வந்து 2 பேரையும் சமாதானம் செய்து வைத்துவிட்டு போவார்கள். கல்யாணம் செய்துவைத்துவிட்டால், இந்த தகராறுகள் வராது என்று நம்பி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்யவிருந்தனர். அதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்று கூறியுள்ளார். தற்பொழுது தப்பியோடிய காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.