பெற்றோர்கள் எதிர்ப்பு; விமானத்தில் காஷ்மீருக்கு பறந்த காதல் ஜோடி - அடுத்து நடந்தது என்ன?
பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஜம்மு காஷ்மீருக்கு சென்று அங்குள்ள கோவிலில் திருணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணம்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா பேகம் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் தங்கத்தமிழன்.

இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
ஜம்மு காஷ்மீர்
இதனையடுத்து இருவரும் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு சென்று அங்குள்ள கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணக்கோலத்தில் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து போலீசார் இருவரது பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை IBC Tamil