அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்; அதுவும் இலவசம்.. முழு விவரம் இதோ..

Tamil nadu Government of Tamil Nadu Murugan
By Sumathi Jun 07, 2024 07:32 AM GMT
Report

ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டம் தொடங்கியுள்ளது.

ஆன்மிகப் பயணம்

இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

arupadai veedu

அதில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூர், முருகன் கோவிலில் இருந்து 7-ந்தேதி (இன்று) தொடங்கவுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 பேர் பயன்பெறுகிறார்கள். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் முதியோர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றது.

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

இலவச சுற்றுலா

மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர்.

அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்; அதுவும் இலவசம்.. முழு விவரம் இதோ.. | Lord Muruga Arupadai Vedu Tour Govt Details

இந்த மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூரில் தொடங்கி திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி, பழனி ஆகிய படைவீடுகளுக்கு சென்று 10-ந்தேதியன்று நிறைவடைகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.