முருகனின் அறுபடை வீடு இலவச சுற்றுலா பயணம் - அமைச்சர் சேகர்பாபு அப்டேட்!

Tamil nadu Tourism P. K. Sekar Babu
By Sumathi Mar 06, 2024 05:25 AM GMT
Report

அறுபடை வீடு இலவச பயணம் இன்று தொடங்குகிறது.

அறுபடை வீடு

அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் குறித்து அமைச்சர் சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

murugan-s-arupadai-veedu

அதில், அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் இன்று பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்குகிறது.

பின்னர், திருச்செந்தூர், பழ முதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய கோவில்களில் தரிசனம் செய்த பின் பழனியில் நிறைவடைகிறது.

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

 இலவச பயணம் 

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன.

sekar babu

மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.