பூமியின் மிகத் தொலைதூர இடம் எது தெரியுமா? அங்கு சென்ற ஒரே நபர்!
பூமியின் தொலைதூர இடமாக பாயிண்ட் நெமோ அறியப்படுகிறது.
பாயிண்ட் நெமோ
பாயிண்ட் நெமோ என்பது பூமியில் இருந்து மிகவும் தொலைவில் உள்ள இடம். அதற்கு அருகிலுள்ள நிலம் தான் பிட்காயின் தீவுகள். அவை 2,688 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.
பாயிண்ட் நெமோவிற்கு அருகிலுள்ள இடம் என்றால் அது விண்வெளி. அதற்கு அருகிலுள்ள மனிதர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில், 408 கிலோமீட்டர்கள் தூரத்தில் மேலே, குறைந்த பூமி சுற்றுப்பாதையில் விண்வெளி வீரர்கள் உள்ளனர்.
பிரிட்டிஷ் ஆய்வாளர்
பல மாலுமிகள் பாயிண்ட் நெமோவிற்கு அருகில் பயணித்துள்ளனர். ஆனால், பாயிண்ட் நெமோவிற்கு பயணத்தை வழிநடத்திய வரலாற்றில் முதல் நபர் என்ற பெருமையை பிரிட்டிஷ் ஆய்வாளர் கிறிஸ் பிரவுன் பெற்றுள்ளார். கடலில் ஒரு கொடியை பிடித்ததன் மூலம் இந்த சாதனை நிகழ்வைக் குறித்துள்ளார்.
இதுகுறித்து பிரவுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு, ‘அணுக முடியாத கடல் துருவம்’ என்றுக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தக் குறிப்பிட்ட பயணத்தை நான் பல மாதங்களாகத் திட்டமிட்டு வருகிறேன்.
ஆனால், அதற்கு முன்னதாகவே, நான் ஆறு வருடங்களாக பாயிண்ட் நெமோவுக்குச் செல்வதற்கான வழிகளைப் பார்த்து வருகிறேன். இலகுவான படகுகள் வெளிப்படையாக விரைவாக அங்கு செல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.