உலகின் சிறந்த இடங்கள் பட்டியல்: இடம்பிடித்த இந்திய நகரங்கள் - என்னென்ன தெரியுமா?
உலகின் சிறந்த இடங்கள் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிறந்த சுற்றுலா தலங்களுக்கான மொத்தம் 50 இடங்கள் கொண்ட பட்டியலில், இந்தியாவை சேர்ந்த மயூர்பாஞ்ச் மற்றும் லடாக் இடம்பெற்றுள்ளது.
லடாக்:
உயர்ந்த மலைப்பாங்கான நில அமைப்புகள், திபெத்திய புத்த கலாசாரம், உள்ளிட்ட பல விசயங்களை கொண்ட உள்ள லடாக் நகரமாகும். வட இந்தியாவின் மிக தொலைதூர பகுதியில் அமைந்து, அடிக்கடி வந்து போக கூடிய பல ஆச்சரியம் நிறைந்த விசயங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் தலைநகராக லே நகரம் உள்ளது. இதற்கு தென்கிழக்கே மைல்கள் தொலைவில் ஹான்லே கிராமம் நாட்டின் முதல் இருண்ட வானுக்கான சரணாலயம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஏனெனில், இது செயற்கை ஒளியில் இருந்தும், அதன் மாசுபாட்டில் இருந்தும் விடுபட்ட கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில் ஆண்டு ஒன்றுக்கு 270 நாட்கள் இரவு தெளிவாக இருக்கும்.
மயூர்பாஞ்ச்:
பசுமையான நிலப்பகுதிக்கு பெயர் பெற்ற, கலாச்சர வளம் நிறைந்த மற்றும் பழமையான கோவில்களை கொண்டது இந்நகரம். ஒடிசாவில் அமைந்துள்ள இந்நகரம் பூமியில் வேறு பகுதியில் பார்க்க முடியாத அரிய வகை கருப்பு புலிகளை கொண்டது. புகழ் பெற்ற சிமிலிபால் தேசிய பூங்கா தவிர, மாவட்டத்தில் பல சிறப்புக்குரிய விஷயங்கள் உள்ளன.
வருகிற ஏப்ரலில், பிரசித்தி பெற்ற மயூர்பாஞ்ச் சாவ் என்ற நடன திருவிழா நடைபெற உள்ளது. அது யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலிலும் உள்ளது. பெருந்தொற்றுக்கு பின்னர் மிக பெரிய அளவில் திருவிழா நடைபெற இருக்கிறது.
இந்த சாவ் நடன திருவிழாவில், பழமையான தற்காப்பு கலைகள் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆகியவை இணைந்து நிகழ்ச்சி நடத்தப்படும்.