திடீர் திடீர்னு மண்ணுக்குள் புதையும் வீடுகள் - ஜோஷிமட் புதையும் நகரமாக அறிவிப்பு...பொதுமக்கள் வெளியேற்றம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம் புதையுண்டு வருவது மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
மண்ணுக்குள் புதையும் வீடுகள்
இந்த நிலத்தை மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நிலச்சரிவு - புதைவு மண்டலமாக மாநில அரசு நேற்று அறிவித்தது.
இதை தொடர்ந்து முதற்கட்டமாக மிகவும் சேதமடைந்த 60 வீடுகளில் வசித்த குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புகழ்பெற்ற பத்ரிநாத், ஹேம்குண்ட் சாஹிப் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு சர்வதேச பனிச்சறுக்கு சுற்றுலாத் தலமான அவுலிக்கும் நுழைவு வாயிலாக இருந்து வருகிறது ஜோஷிமட் நகர்.
அந்த பகுதிகளில் இருக்கும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
மக்களை வெளியேற்ற அரசு உத்தரவு
இந்த நிலையில் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு - புதைவு மண்டலமாக ஜோஷிமட் நகர் அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்வால் பகுதி ஆணையர் சுஷில குமார் தெரிவித்தார்.
மேலும் வேறு இடங்களுக்கு குடிபெயர விரும்புவோருக்கு அரசு சார்பில் மாதம் ரூ.4 ஆயிரம் என 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றார்.
இது குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
ஜோஷிமட் சூழலை நேரில் ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.