நிலவில் தரையிறங்கிய விண்கலம்; மாதிரிகளுடன் மீண்டும் பூமிக்கு திரும்பும் - எப்படி தெரியுமா?
சாங்கே - 6 விண்கலம் நிலவின் தொலைதூர பகுதியில் சீன நேரப்படி இன்று காலை தரையிறங்கியது.
சாங்கே - 6
சீனாவின் நிலவு கடவுளான சாங்கே என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் விண்கலங்கள் அடுத்தடுத்து அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு சாங்கே - 5 விண்கலம் நிலவில் சென்று மாதிரிகளை சேகரித்து மீண்டும் பூமிக்கு திரும்பியது.
இந்நிலையில் நிலவின் தொலைதூர பகுதிக்கு சாங்கே - 6 விண்கலம் சென்றது. இது 'அய்த்கன் பேசின்' என்ற தென்துருவத்தின் பெரிய நிலப்பரப்பில் இன்று காலை தரையிறங்கியது.
மீண்டும் பூமிக்கு
மேலும், நிலவில் மாதிரிகளை சேகரித்து விட்டு வரும் 25-ம் தேதி பூமிக்கு திருப்பி அனுப்பி வைக்கும். நிலவின் மேல்பரப்பு மற்றும் அடிப்பரப்பில் உள்ள 2 கிலோ அளவிலான பொருட்களை இயந்திர கரம் மற்றும் துளை போடும் இயந்திரத்தின் உதவியுடன் சேகரிக்கும்.
பின்னர் அந்த பொருட்களை உலோக கொள்கலனில் நிரப்பி ஆர்பிட்டருக்கு திரும்பி கொண்டு வரும். அந்த கொள்கலன் கேப்சூலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியிலுள்ள பாலைவன பகுதியில் வந்து தரையிறங்கும்.