லண்டன் டூ கொல்கத்தா 50 நாட்கள்; பேருந்து சேவை - ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா?
லண்டனில் இருந்து கொல்கத்தா வரை இயக்கப்பட்ட பேருந்து சேவை நிறுத்தப்பட்ட தகவல் குறித்து தெரிந்துகொள்வோம்.
லண்டன் - கொல்கத்தா
1957ல் ஐரோப்பாவின் லண்டன் முதல் ஆசியாவின் கொல்கத்தா வரையிலான 10,000 மைல் தூரத்தில் பேருந்து சேவை இயக்கப்பட்டது.
இதில் பயணம் செய்ய 145 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.16,046.99) கட்டணமாக இருந்துள்ளது. இந்தப் பேருந்து இந்தியாவின் கொல்கத்தாவை வந்தடைய மொத்தம் 50 நாட்கள் எடுத்துள்ளன.
பெல்ஜியம், யூகோஸ்லாவியா, துருக்கி, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. இந்தப் பேருந்தில் படுக்கை வசதி, மின்விசிறி, இசை, வழியில் தங்குவதற்கான விடுதிகள் உள்ளிட்ட வசதிகளும் இருந்துள்ளன.
பேருந்து சேவை
தாஜ்மஹால், காஸ்பியன் கடல் கடற்கரை மற்றும் கைபர் கணவாய் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. சில வருடங்களுக்கு பின் பேருந்து விபத்தில் சிக்கி இயக்கத்தை நிறுத்த வேண்டியதாகியுள்ளது.
இதனையடுத்து, 1968ல் பிரிடிஷ் பயணியான அண்டி ஸ்டீவர்ட் இதனை டபுள் டக்கர் பேருந்தாக வடிவமைத்து அதற்கு ஆல்பர்ட் என பெயிரிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். சிட்னி முதல் லண்டன் வரை பயணம் செய்தது.
இந்தியா, பர்மா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை இணைத்து பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், 1976ல் ஈரான் புரட்சி காரணங்களால் ஆல்பர்ட் சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.