உலகின் 15 சதவீத நிலம் இவங்களிடம்தான்.. எந்த பணக்கார குடும்பம் தெரியுமா?
உலகில் அதிக நிலம் யாருக்கு சொந்தமானது? எவ்வளவு நிலம் என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.
அதிக நிலம்
உலகிலேயே அதிக நிலம் கொண்ட குடும்பம் என்ற பெருமையை இங்கிலாந்தின் அரச குடும்பம் பெற்றுள்ளது. இவர்களின் நிலங்களையும் சொத்துகளையும் கவனிக்க தனி நிறுவனம் உள்ளது.
தற்போது அரசராக இருக்கும் மன்னர் மூன்றாம் சார்லஸ், அரசராக இருக்கும் வரை இந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது சொத்தாகவே கருதப்படும். சார்லஸ் உலகம் முழுவதும் 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துகளை வைத்திருக்கிறார்.
அரச குடும்பம்
இந்த நிலங்கள் கிரேட் பிரிட்டன், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் அமைந்துள்ளன. இந்த முழு சொத்தையும், தி கிரவுன் எஸ்டேட்(The Crown Estate) என்ற அமைப்பு நிர்வகிக்கிறது. அரச குடும்பம் நேரடியாக 2,50,000 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கிறது.
இதன்மூலம் பல்வேறு ஷாப்பிங் சென்டர்களை நடத்துகிறது. மணல், சரளை, சுண்ணாம்பு, கிரானைட், செங்கல், களிமண், நிலக்கரி ஆகியவற்றையும் விற்பனை செய்கிறது.
மொத்தத்தில், பிரிட்டிஷ் முடியாட்சியின் உலகளாவிய சொத்துக்கள் $15.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக செல்வத்தில் 16.6 சதவீதத்தை பிரிட்டிஷ் மன்னர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.