இந்தியாவிலே அதிக நிலம் வைத்திருப்பது யார் தெரியுமா? டாப் 3 இவர்கள் தான்
இந்தியாவில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நில உரிமை
உலகெங்கிலும் நிலத்தின் மீதான உரிமை என்பது கௌரவமாக பார்க்கப்படுகிறது. பண்டைய காலத்தில் நிலத்திற்காக தான் பல்வேறு போர்களே நடைபெற்றுள்ளன. எவ்வளவு அதிக நிலத்தை ஆட்சி செய்கிறார் என்பதை வைத்தே மன்னரின் மதிப்பு முடிவு செய்யப்படுகிறது.
தற்காலத்திலும் தங்கத்துக்கு இணையாக மக்கள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புவது நிலத்தில் தான். அந்த அளவுக்கு நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் யாரிடம் அதிக நிலம் உள்ளது என்பதை பாப்போம்.
இந்திய அரசு
அரசாங்க நில தகவல் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் அதிகம் நிலம் வைத்திருப்பது இந்திய அரசு தான். இந்திய அரசு தோராயமாக 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்தைக் கொண்டுள்ளது. இந்த நிலத்தை 116 பொதுத்துறை நிறுவனங்களும், 51 அமைச்சகங்களும் பயன்படுத்தி வருகின்றன.
இதில் அதிகபட்சமாக இந்திய ரயில்வே 2926.6 சதுர கிலோமீட்டர் நிலமும், இதற்கு அடுத்தபடியாக ராணுவம் மற்றும் நிலக்கரி அமைச்சகத்துக்கு 2580.92 சதுர கிலோமீட்டர் நிலமும் உள்ளது. மேலும் எரிசக்தி அமைச்சகத்துக்கு 1806.60 சதுர கிலோமீட்டர் நிலமும் உள்ளது.
கத்தோலிக்க திருச்சபை
இந்திய அரசுக்கு அடுத்தபடியாக அதிக நிலம் வைத்திருப்பது கத்தோலிக்க திருச்சபை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் அறக்கட்டளைகளை இயக்குகிறது. 1927 ம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஆங்கிலேயர்கள் இயற்றிய இந்திய தேவாலயங்கள் சட்டம் என்ற சட்டத்தின் மூலம் இவ்வளவு அதிகமான நிலங்களை கையகப்படுத்த தொடங்கினர்.
இதன்படி கத்தோலிக்க திருச்சபைக்கு 17.29 கோடி ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு தோராயமாக 20,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நிர்வாகம் செய்கிறது.
மூன்றாவதாக அதிக நிலம் வைத்திருப்பது வக்பு வாரியம். இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியின்போது வக்ஃப் நிலங்கள் மற்றும் சொத்துகள் அதிகம் பெறப்பட்டன. வக்ஃப் சட்டம் 1954-ல் ஏற்படுத்தப்பட்டு, மத்திய வக்ஃப் கவுன்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மசூதிகள், கல்லறைகள் மற்றும் மத்ரஸாக்கள் உள்ளன. வக்பு வாரியத்துக்கு சொந்தமாக 6 லட்சத்துக்கும் அதிகமான அசையா சொத்துக்கள் உள்ளன.