ஏன் துருக்கியில் மட்டும் அதிக முறை நில நடுக்கம் : இதுதான் காரணமா?
உலகின் கால் நூற்றாண்டாக துருக்கி பல பயங்கர நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றது. துருக்கி உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாகும்.துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது அனடோலியன் தட்டில் அமர்ந்திருக்கிறது, இது யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது.
ஒரு பெரிய பூகம்பம் இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர், துருக்கி வரலாற்றில் மிக மோசமாக நிலநடுக்கம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஏற்பட்டது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகள் வரை பதிவானது.
அதில் 17 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர். 2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 170 க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானது.
2011ஆம் ஆண்டு 7.2, 5.8 மற்றும் 5.6 ரிக்டர் அளவுகளில் துருக்கி நகரங்களைத் தாக்கிய மூன்று நிலநடுக்கங்களில் 600 பேருக்கு மேல் உயிரிழந்தார்கள். 2020ஆம் ஆண்டில் 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் எல்சாயிக் நகரில் நிகழ்ந்தது.
இதில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பூகம்பத்தால் கொல்லப்பட்டார்.
ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தற்போது துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6-ஆக பதிவாகியுள்ளது
.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது.
7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
துருக்கி, சிரியா இரு நாடுகளில் மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன
( நன்றி தினத்தந்தி)