வயிற்றுக்குள் கரப்பான்பூச்சி; அலறிய இளைஞர் - மிரண்ட மருத்துவர்கள்!
இளைஞர் வயிற்றில் இருந்த கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்றில் கரப்பான்பூச்சி
டெல்லியைச் சேர்ந்தவர் 23 வயதான இளைஞர் ஒருவர் கடும் வயிற்று வலி மற்றும் உணவு செரிமானப் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அங்கு பரிசோதனை செய்ததில் அவரது மேல் இரைப்பை குடலில் எண்டோஸ்கோபி செய்ய பரிந்துரைத்துள்ளனர்.
துடித்த இளைஞர்
அதில், இளைஞரின் சிறுகுடலில் உயிரோடு ஒரு கரப்பான்பூச்சி இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே, தாமதிக்காமல் எண்டாஸ்கோப்பி முறையை கையாண்டு 10 நிமிடத்தில் வயிற்றில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்தனர்.
அந்த கரப்பான்பூச்சி 3 செமீ நீளம் கொண்டதாக இருந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மிக சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததால் இளைஞர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதுபோன்ற தருணங்கள் மிகவும் சிக்கலானவை. சாப்பிடும் போது இந்த கரப்பான்பூச்சியை இளைஞர் விழுங்கி இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.