150 வயது வரை எப்படி வாழ்வது? அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் - தம்பதி தகவல்!
ஒரு தம்பதி, 150 வயது வரை வாழ்வது எப்படி என்பது குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
நீண்டநாள் வாழ்வு
அமெரிக்கா, மிட்வெஸ்ட் பகுதியை சேர்ந்தவர் வாரன் லென்ஸ்(36). இவருடைய மனைவி கைலா பார்னஸ்-லென்ஸ்(33). இருவரும் மனிதனின் வாழ்நாளுக்கான எல்லையை கடந்து வாழ்வது என உறுதி எடுத்துள்ளனர்.
கைலா சுகாதார மற்றும் நீண்டநாள் வாழ்வதற்கான கிளினிக்கின் நிறுவனர்களில் ஒருவராக இருக்கிறார். அவருடைய கணவர் வாரன், சந்தைப்படுத்துதல் நிறுவனம் ஒன்றில் தலைமை வருவாய் அதிகாரியாக உள்ளார். அமெரிக்காவில் சராசரி வாழ்நாள் 76 ஆக உள்ள நிலையில், இவர்கள் அதனை கடந்து வாழ வேண்டுமென சில விஷயங்களை கடைப்பிடித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், காலை பொழுது, மின்காந்த புல தெரபியுடன் (சிகிச்சை) தொடங்குகிறது. வீட்டிலேயே கிளினிக் சார்ந்த உபகரணம் ஒன்றை வைத்து பயன்படுத்துகிறார்கள். ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் அறை மற்றும் நானோவி என்ற உபகரணங்களை யூஸ் செய்கின்றனர்.
தம்பதி தகவல்
ஆர்கானிக் உணவு, நடைபயணம் என தொடர்ந்து சில நடைமுறைகளை கடைபிடிக்கின்றனர். வீட்டில் உள்ள அறைகளில் சிவப்பு விளக்குகளை ஒளிர விடுகின்றனர். இரவு 9 மணி ஆனதும் படுக்கைக்கு சென்று விடுகின்றனர்.
இவர்களது அணுகுமுறை உயிரியல் முறையில் வயது முதிர்வு ஏற்படுவது குறையும் வகையில் அல்லது வயது பின்னே செல்வது ஆகியவற்றை கொண்ட பயோஹேக்கிங் முறையை ஒத்துள்ளது. மேலும், பெற்றோர் ஆவதற்கும் தயாராகி வருகின்றனர்.
குழந்தைகளை மொபைல் போன், டி.வி. திரையில் நேரம் செலவிட அனுமதி கிடையாது. வெளியே சென்று அழுக்காகும் வரை விளையாட செய்வோம். இயற்கையுடனும், சூரியனுடனும் இருக்க செய்வோம் என்கின்றனர்.