கேன்சர் நோயாளிக்கு ரோபோ மூலம் அறுவைசிகிச்சை; எதிர்பாராமல் நடந்த தவறு - கதறும் கணவர்!
ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட அறுவைசிகிச்சையில் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ ரோபா
அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவரின் மனைவி சாண்ட்ராவுக்கு பெருங்குடலில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் என்ற மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு சாண்ட்ராவுக்கு ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பெருங்குடலில் பீடித்திருந்த புற்றுநோய் அகற்றப்பட்டது. ஆனால், அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது எதிர்பாராவிதமாக அவரின் சிறுகுடலில் துவாரம் விழுந்துள்ளது.
வழக்கு
பின்னர் டா வின்சி ரோபோவின் தவறான அறுவை சிகிச்சையால் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கடந்த 6-ம் தேதி கணவர் ஹார்வி சுல்ட்ஸெர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ரோபாவால் செய்யப்பட அறுவை சிகிச்சையால் தனது மனைவி இறந்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், டா வின்சி ரோபோவின் பாதகங்கள் குறித்தும்,
அதன் தயாரிப்பு நிறுவனம் ரோபோவை முறையாக இயக்க வாய்ப்பில்லாத மருத்துவமனைகளுக்கும் விற்றது குறித்தும் தரவுகளோடு விளக்கியுள்ளார். மேலும், நஷ்ட ஈடாக 75000 டாலரும் (இந்திய மதிப்பில் ரூ.62,27,145) கோரியுள்ளார்.