60 வயதில் நீண்டநாள் காதலியை கரம் பிடிக்கும் பிரதமர் - இந்தமாதிரி இதுதான் முதல்முறை!
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசு தனது காதலியை திருமணம் செய்துகொள்ளும் முடிவை அறிவித்துள்ளார்.
அல்பானீசு - ஹெய்டன்
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசு (60), தனது நீண்டநாள் காதலியான ஜோடீ ஹெய்டன் (46) என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் திருமண நிச்சயம் நடந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு விருந்து நிகச்சி ஒன்றில் ஹெய்டனை முதல்முறையாக சந்தித்துள்ளார் அல்பானீசு. பின்னர் 2022-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலின்போது இருவரும் ஒன்றாக பிரச்சாரத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருமணம்
அவர் பிரதமரான பின்னர் துபாய், மேட்ரிட், பாரீஸ், லண்டன் மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் தன்னுடன் ஹெய்டனை அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளனர்.
பதவியில் இருக்கும்போது, திருமண நிச்சயம் நடந்த முதல் பிரதமர் அல்பானீசு ஆவார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அல்பானீசுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.