தேர்தல் பத்திர நன்கொடை; அதானி..அம்பானி இல்லை - மிரள வைத்த தமிழக நிறுவனம்!

India Election
By Sumathi Mar 15, 2024 03:17 AM GMT
Report

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள்

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

election bond list 2024

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த பட்டியலில் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் தேர்தல பத்திரம் மூலம் நன்கொடை வழங்கி உள்ளது. இது கோவையைச் சேர்ந்த லாட்டரி நிறுவனரான மார்ட்டினின் நிறுவனம் ஆகும். அதேபோல் மேகா என்ஜினீயரிங் லிட். - ரூ.966 கோடி வழங்கி உள்ளது.

அன்றே சொன்ன ராகுல்காந்தி; தேர்தல் பத்திரம் திட்டம் - வைரலாகும் பதிவு!

அன்றே சொன்ன ராகுல்காந்தி; தேர்தல் பத்திரம் திட்டம் - வைரலாகும் பதிவு!

நன்கொடை லிஸ்ட்

பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் - ரூ.1,368 கோடி

மேகா என்ஜினீயரிங் லிட். - ரூ.966 கோடி

குவிக் சப்ளை செயின் லிட். - ரூ.410 கோடி

வேதாந்தா நிறுவனம் - ரூ.400 கோடி

ஹால்டியா - ரூ.377 கோடி

பாரதி குழுமம் - ரூ.247 கோடி

எஸ்செல் மைனிங் - ரூ.224 கோடி

வெஸ்டர்ன் யுபி பவர் - ரூ.220 கோடி

கெவன்டர் புட்பார்க் - ரூ.194 கோடி

மதன்லால் லிட் - ரூ.185 கோடி

டி.எல்.எப். குழுமம் - ரூ.170 கோடி

யசோதா ஆஸ்பத்திரி - ரூ.162 கோடி

உட்கல் அலுமினியா - ரூ.145.3 கோடி

ஜிண்டால் ஸ்டீல் - ரூ.123 கோடி

பிர்லா கார்பன் - ரூ.105 கோடி

ரங்டா சன்ஸ் - ரூ.100 கோடி

டாக்டர் ரெட்டிஸ் - ரூ.80 கோடி

பிரமல் என்டர்பிரைசஸ் - ரூ.60 கோடி

நவயுகா என்ஜினீயரிங் - ரூ.55 கோடி

ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல் - ரூ.40 கோடி

ஈடில்வெயிஸ் குழுமம் - ரூ.40 கோடி

சிப்லா லிட் - ரூ.39.20 கோடி

லட்சுமி மிட்டல் - ரூ.35 கோடி

கிராசிம் இன்டஸ்ட்ரீஸ் - ரூ.33 கோடி

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் - ரூ.30 கோடி

பஜாஜ் ஆட்டோ - ரூ.25 கோடி

சன் பார்மா - ரூ.25 கோடி

மேன்கைண்ட் பார்மா - ரூ.24 கோடி

பஜாஜ் பைனான்ஸ் - ரூ.20 கோடி

மாருதி சுசுகி இண்டியா - ரூ.20 கோடி

அல்ட்ராடெக் - ரூ.15 கோடி

டிவிஎஸ் மோட்டார்ஸ் - ரூ.10 கோடி  

donated companies list