அன்றே சொன்ன ராகுல்காந்தி; தேர்தல் பத்திரம் திட்டம் - வைரலாகும் பதிவு!
தேர்தல் பத்திரம் தொடர்பான ராகுல் காந்தி பழைய பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
தேர்தல் பத்திரம்
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1,000-ல் தொடங்கி, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. தனிநபர், நிறுவனம் என யார் வேண்டுமானாலும் இதை வாங்கி, தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.
இந்த பத்திரங்களில் வாங்குபவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. இதை பெறும் கட்சிகள், 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொகை பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும். இதற்கிடையில், இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்), காமன் காஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள்,
ராகுல் காந்தி பதிவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெயா தாக்குர் சார்பில் 2017ல் வழக்கு தொடரப்பட்டது. 6 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து வந்தது. அந்த வழக்கில் தற்போது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
In “New” India, bribes & illegal commissions are called Electoral Bonds. https://t.co/mYl5OxcVLU
— Rahul Gandhi (@RahulGandhi) November 18, 2019
இதுவரை விற்பனை செய்யப்பட்ட பத்திரங்கள் குறித்த முழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் வங்கி மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பைப் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதே,
எம்பி ராகுல் காந்தி இதுகுறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், ”நரேந்திர மோடியின் ஊழல் கொள்கையின் மற்றுமொரு ஆதாரம் உங்கள்முன் வந்துள்ளது. ஊழல் மற்றும் கமிஷன் பெறுவதற்கான ஒரு தடமாக பாஜக தேர்தல் பத்திரங்களை உருவாக்கியது. இன்று இந்த விவகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என பதிவை பகிர்ந்திருந்தார். அந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.