கவனம் தேவை: ஸ்மோக் பிஸ்கட்டால் உயிருக்கு அபாயமா? ஆய்வுகள் என்ன சொல்கிறது?
ஸ்மோக் பிஸ்கட் விபரீதம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரவ நைட்ரஜன்
கர்நாடகா, தாவணகெரேவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலி ஏற்பட்டு துடித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து. திரவ நைட்ரஜன் மூலம், தயாரிக்கப்படும் smoke biscuit-கள் உயிருக்கு ஆபத்து. அதீத குளிர் காரணமாக சுவாசப்பாதை, உணவுப்பாதையை உறைய வைத்துவிடும் என்பதால்,
கடும் எச்சரிக்கை
திரவ நைட்ரஜன்களை உணவுப் பொருட்களோடு பயன்படுத்தக்கூடாது. பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு, பொழுதுபோக்கு இடங்களில், smoking biscuit-ஐ வாங்கிக் கொடுக்க வேண்டாம். திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாய் சிதையக்கூடும்.
டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேசும் திறன் பறிபோகும் ஆபத்து உள்ளது. எனவே திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை யாரும் விற்கக் கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை,
ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து, சென்னையில் கடைகளில் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.