நடுவானில் விமானம்; பாத்ரூமில் சிறுமிகளை மோசமாக வீடியோ எடுத்த ஊழியர் - கவனம்!
விமானத்தில் சிறுமிகளை ஊழியர் ஒருவர் மோசமாக வீடியோ எடுத்துள்ளார்.
விமானத்தில் சிறுமிகள்
வட கரோலினாவில் இருந்து பாஸ்டனுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், 14 வயது சிறுமி ஒருவரை ஊழியர் தாம்சன் என்பவர் கழிவறையில் வீடியோ எடுத்துள்ளார். அங்கே ஐபோனை மறைத்து ஒட்டி அதன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

செல்போனை பார்த்த சிறுமி அதனை பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே, அவர்கள் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில், ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல முறை அந்த ஊழியர் இவ்வாறு நடந்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
சிக்கிய ஊழியர்
அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த 9 வயது சிறுமி உட்பட நான்கு மைனர் சிறுமிகளையும் வீடியோ எடுத்துள்ளார். அவரது க்ளவுட் கணக்கைச் சோதனை செய்ததில் பல மைனர் சிறுமிகளின் அந்தரங்க படங்கள் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பல சிறுமிகள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தில் கழிப்பறை பயன்படுத்த வரும் சிறுமிகளை இந்த டாய்லெட்டில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்லி முதலாம் வகுப்பு டாய்லெட்டை பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளார். அதன்படி சிறுமிகள் கழிவறையைப் பயன்படுத்தும் போது அங்கே ஏற்கனவே மறைத்த வைத்த ஐபோன் மூலம் வீடியோ எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனையடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டு, அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
சிறுமிகள் மீது அத்துமீறல் : இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவிற்கு அவுஸ்ரேலியாவில் 13 வருட சிறை IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan