பறக்கும் விமானத்தில் பக்கத்து சீட் பெண் கதறல் - தூங்குவதுபோல் ஆண் பயணி செய்த காரியம்!

Sexual harassment Crime Flight Mumbai
By Jiyath Sep 11, 2023 07:34 AM GMT
Report

விமானத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் அத்துமீறல்

மும்பையில் இருந்து, கவுகாத்திக்கு இரவு நேரத்தில் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகள் தூங்க வேண்டும் என்பதற்காக விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.

பறக்கும் விமானத்தில் பக்கத்து சீட் பெண் கதறல் - தூங்குவதுபோல் ஆண் பயணி செய்த காரியம்! | A Man Sexually Assaulting A Woman In Flight

அவரின் அருகே உள்ள இருக்கையில் ஆண் ஒருவர் பயணித்துள்ளார். அந்த ஆண் பயணி, அந்த பெண்ணின் மீது அததுமீறலாக கை போட்டுள்ளார். பெண் விழித்து பார்த்தபோது அந்த நபர் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். அவரின் கையை நகர்த்தி விட்டு பெண் தூக்கியபோது மீண்டும் அந்த நபர் பெண்ணின் மீது கை போட்டுள்ளார்.

இதனால் பெண் பயணிக்கு சந்தேகம் எழுந்துள்ளது, அந்த நபர் வேண்டுமென்றே தன் மீது கை போட்டதும் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. அவசரப்படாமல் பொறுமையாக இருந்த பெண், மீண்டும் அந்த நபர் அத்துமீறலாக தன் மீது கை வைத்தவுடன், அவரின் கையை பிடித்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.

80 லட்சம் பழமையான மண்டை ஓடு கண்டுபிடிப்பு - அப்போ மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில் இல்லையா?

80 லட்சம் பழமையான மண்டை ஓடு கண்டுபிடிப்பு - அப்போ மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில் இல்லையா?

ஆண் பயணி கைது

பெண்ணின் சத்தத்தைக் கேட்டவுடன் அங்கிருந்த விமான ஊழியர்கள் ஓடிவந்து விசாரித்தபோது, நடந்தவற்றை பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மேலும் தான் சிகிச்சைக்காக மும்பை வந்து கவுத்திக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும், அருகிலிருந்த அந்த நபர் தூங்குவதுபோல் நடித்து தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் பெண் குற்றம் சாட்டினார்.

பறக்கும் விமானத்தில் பக்கத்து சீட் பெண் கதறல் - தூங்குவதுபோல் ஆண் பயணி செய்த காரியம்! | A Man Sexually Assaulting A Woman In Flight

பின்னர் அந்த நபரை விமான நிலையத்தில் இருந்த போலீசாரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் காவல் நிலையம் வரை வந்து சாட்சி சொன்னதை பாதிக்கப்பட்ட பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.