80 லட்சம் பழமையான மண்டை ஓடு கண்டுபிடிப்பு - அப்போ மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில் இல்லையா?
80 லட்சம் பழமையான மனித குரங்கின் மண்டை ஓடு துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மண்டை ஓட்டுப் புதை படிமம்
டர்கே இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ சேபியன்ஸ் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றியது என்று நம்பப்படுகிறது.
மேலும் இந்த ஹோமோ சேப்பியன் இனம் படிப்படியாக ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் உலகின் மற்ற பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்தார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில் தென் கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் அமைந்துள்ள துருக்கியில் ஒரு மனிதக் குரங்கின் மண்டை ஓட்டுப் புதை படிமம் கிடைத்துள்ளது.
அந்த மந்தி குரங்கின் மண்டை ஓட்டிற்கு 'ஆண்டோலூவியுஸ் டர்கே' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குரங்கு சுமார் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், இது தான் மனித இனத்தின் முதல் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதன் மூலம் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் தான் மனித இனத்தின் முதல் உயிரினம் தோன்றியிருக்கக் கூடும் என்றும், சுமார் 5 மில்லியன் ஆண்டுகளாக அந்த பகுதியில் வாழ்ந்த பின்னர் ஆப்பிரிக்க மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் கருத்து
கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓட்டுப் படிமம் மிரர் இமேஜிங் முறையில் உருவகப்படுத்தப்பட்டதில் மனிதனின் மண்டை ஓட்டை ஒத்துப் போகும் பல்வேறு அம்சங்கள் கிடைத்துள்ளன என்றும் குறிப்பாக நெற்றி மற்றும் மூளைப்பகுதியின் ஓடுகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
முன்பு கிடைத்துள்ள புதை படிமங்களை விட இந்த ஆண்டோலூவியுஸ் மனித இனத்தை மிகவும் ஒத்ததாக இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இன்னும் புதைப் படிமங்களை கண்டுபிடித்து இரண்டு கண்டங்களிலும் மனித குலத்தின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த கோட்பாட்டை வரையறுக்க வேண்டும் என்கிறார்கள் மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள்