smoke biscuit சாப்பிட்ட சிறுவன்; நேர்ந்த ஆபத்து - தடை விதிக்க இயக்குனர் வலியுறுத்தல்!
உயிருக்கு ஆபத்தான ஸ்மோக் பிஸ்கெட்டை உடனடியாக தடை செய்ய கோரி இயக்குநர் மோகன் ஜி வலியுறுத்தியுள்ளார்.
நேர்ந்த ஆபத்து
திரவுபதி, ருத்ர தாண்டவம் உள்ளியிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ஜி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது இணையத்தள பாக்கத்தில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு திரவ நைட்ரஜனை கொண்ட பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள்.
அதை அப்படியே எடுத்து வாயில் போட்டு கொள்ள வேண்டும் அதை சாப்பிட்டால் வாய், மூக்கில் இருந்து புகை வரும். இதை பார்த்து ஆசையாக சிறுவன் ஸ்மோக் பிஸ்கெட்டை சாப்பிடுகிறார். ஆனால், சாப்பிட்ட அடுத்த நிமிடமே அவன் வலியால் துடிக்கிறான். இதற்காகத்தான் அந்த பிஸ்கெட்டை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள்.
இயக்குனர் வலியுறுத்தல்
இது குறித்து இயக்குனர் மோகன் ஜியின் பதிவில், இதுபோன்று விற்கும் ஸ்மோக் பிஸ்கட் என்ற தின்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம்பிடிப்பார்கள். அதில் ஊற்றப்படுவது லிக்யூட் நைட்ரஜன். ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கே ஆபத்து.
அதனால் தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் பதிவிட்ட ஒரு வீடியோவை முதல்வர் ஸ்டாலினுக்கும் டேக் செய்துள்ளார். இதையடுத்து, இந்த வீடியோ எடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் இல்லை என்று ஒரு சிலர் கூறியுள்ளனர்.
அதற்கு விளக்கம் அளித்து மோகன் ஜி, சென்னை தீவு திடலில் இந்த வருடம் நடந்த அரசு பொருட்காட்சியில் இரண்டு கடைகள் இதற்காக ஒதுக்கப்பட்டன. பல கடற்கரைகளில் விற்பனை செய்கிறார்கள். திருமண விழாக்களில் தருகிறார்கள். உண்மையே என்று தெரிவித்துள்ளார்.