'மௌத் பிரெஷ்னர்' சாப்பிட்ட 2 பேர் கவலைக்கிடம்; ரத்த வாந்தி எடுத்த குடும்பம் - ஷாக் சம்பவம்!
உணவகத்தில் மௌத் பிரெஷ்னர் வாங்கி சாப்பிட்ட குடும்பத்தினர் ரத்த வாந்தி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மௌத் பிரெஷ்னர்
உத்திரபிரதேசம், கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் அங்கித் குமார் என்ற நபர் அவரது குடும்பத்தினருடன் சென்று சாப்பிட்டுள்ளார்.

உணவருந்தி முடித்ததும் உணவக ஊழியர் கொடுத்த மௌத் பிரெஷ்னரை சாப்பிட்ட சிறுது நேரத்தில் கடும் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அவர்களது நாக்கில் எரிச்சல், வாயில் புண் ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. ஒருவர் ரத்த வாந்தியும் எடுத்துள்ளார்.
ஷாக் சம்பவம்
மேலும், உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 2 பேரின் உடல் நிலை காவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார் இந்த சம்பவத்தை குறித்து நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட ஒருவர், ``மருத்துவரிடம் அந்த மௌத் ஃப்ரெஷ்னர் பாக்கெட்டைக் காட்டியபோது, அவர் அதை ட்ரை ஐஸ் என்றார். மேலும், அது மரணத்துக்கு வழிவகுக்கக் கூடிய ஒரு அமிலம் என்றார் மருத்துவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan