யூடியூப் சேனல்களுக்கு இனி லைசென்ஸ் அவசியம் - அரசு பரிசீலனை
யூடியூப் செய்தி சேனல்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை கட்டாயமாக்கப்படவுள்ளது.
யூடியூப் சேனல்
கர்நாடகா, ஹூப்பள்ளியில் மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது.
இதில் அந்த மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார். அதில், நெறிமுறையின்றி செயல்படும் யூடியூப் செய்தி சேனல்களால் பத்திரிகை துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.
லைசென்ஸ் அவசியம்
யூடியூப் செய்தி சேனல்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் பரிந்துரை செய்துள்ளனர்.
பின் இது குறித்து பேசிய சித்தராமையா, “மிரட்டல் மற்றும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு.
செய்திகளை ஒளிபரப்பு செய்யும் யூடியூப் சேனல்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.