16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை!
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 10 பேரை காசர்கோடு போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் தொல்லை
கேரளா, காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் போனில், டேட்டிங் செயலியை பதிவிறக்கி பாலோ செய்து வந்துள்ளார். இதில், அறிமுகமான சிலர் அச்சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
10 பேர் கைது
இதனை யாருக்கும் சிறுவன் சொல்லாமல் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள், அந்தச் சிறுவனை பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அந்தச் சிறுவனின் தாய் இச்சம்பவத்தை கண்டறிந்து போலீஸில் புகாரளித்துள்ளார்.
விசாரணையில், ரயில்வே போலீஸ் அதிகாரி, கல்வி அதிகாரி, தொழிலதிபர், உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.