மனிதர்களைக் கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் சிறை - அரசு புதிய திட்டம்!
தெரு நாய் விவகாரத்தில் உபி அரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தெரு நாய் விவகாரம்
தெருநாய்களின் தொந்தரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தெருநாய் கடித்து சில மனித உயிரிழப்புகளும் நடந்துவருகின்றன.
சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தரப் பிரதேசம் அரசு தெருநாய்களை ஆயுள் முழுவதும் காப்பகத்திலேயே வைக்கும்படியான ஒரு நெறிமுறையை வழங்கியுள்ளது.
உபி அரசு உத்தரவு
அதன்படி, தெரு நாய் விவகாரத்தில் நெறிமுறைகளை வெளியிட்டுள்ள உத்தரப் பிரதேச அரசு, தூண்டுதல் இல்லாமல் மனிதர்களைக் கடிக்கும் நாயை 10 நாட்கள் காப்பகத்தில் அடைத்து வைக்க வேண்டும்.
அதே நாய் மீண்டும் யாரையாவது கடித்தால் ஆயுள் முழுவதும் காப்பகத்திலேயே அடைக்க வேண்டும். காப்பகத்தில் தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தப்படும் என்றும்,
நாய் தூண்டுதலால் கடித்ததா இல்லையா என்பதை கால்நடை மருத்துவர் அடங்கிய உள்ளூர் அளவிலான குழு விசாரித்து முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.