குழந்தைகளை கடித்து குதறிய எலி - அரசு மருத்துவமனை ஐசியுவில் அதிர்ச்சி!
அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் படுகாயம்
மத்தியப் பிரதேசம், இந்தூரில் மிகப் பெரிய அரசு மருத்துவமனையான மஹாராஜா யஷ்வந்த்ராவ் சிக்கித்சாலயா அமைந்துள்ளது.
இங்கு இரண்டு குழந்தைகள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் இரு குழந்தைகளுக்கு கைவிரல், தலை மற்றும் தோள்பட்டையில் ஏதோ கடித்தது போன்ற காயங்கள் இருந்ததை செவிலியர் கண்டுள்ளார்.
மருத்துவமனை அலட்சியம்
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி, சிசிடிவி காட்சிகளை மருத்துவமனை நிர்வாகம் ஆராய்ந்துள்ளது.
MP: Rats Bite Off Hands of Two Newborns in NICU at Indore's MY Hospital#Indore #MYHospital #NICU #Newborns #HospitalNegligence #RatsInHospital #MadhyaPradesh #HealthcareCrisis #PatientSafety #MedicalNegligence #medicaldialogues pic.twitter.com/XB39eJcl3m
— Medical Dialogues (@medicaldialogs) September 2, 2025
அதில் இரு குழந்தைகள் படுக்க வைக்கப்பட்டிருக்கும் தொட்டில்களுக்கு அருகிலேயே, மருத்துவ உபகரணங்கள் மீது எலிகள் ஓடுவது பதிவாகியுள்ளது. குழந்தைகள் தற்போது பாதுகாப்பாகவும், தொடர் கண்காணிப்பிலும் உள்ளனர்.
மருத்துவமனை முழுவதும் விரைவில் பெரிய அளவில் எலி ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். உறவினர்கள் வார்டுகளுக்குள் உணவு கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.