உலகையே உலுக்கிய லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம் - கேரள நபருக்கு தொடர்பா ?

Cyber Attack Kerala India Israel
By Vidhya Senthil Sep 22, 2024 02:08 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவின் கேரளாவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேஜர்கள் வெடிப்பு 

லெபனானில் கடந்த செப். 17ஆம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

lebanon

ஏறத்தாழ 3,000 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து செப். 18 தேதி அன்று லெபனானில் வாக்கி-டாக்கிகளும் வெடித்துப் பரபரப்பை உண்டாக்கியது. இந்தச் சதிச் செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத் துறை சார்பிலிருந்து இதுவரை எந்தவித விளக்கமும் வழங்கப்படவில்லை இந்த நிலையில்  பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவின் கேரளாவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகையே உலுக்கிய பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல்.. அடுத்த டார்கெட் இதுதான் -வெளியான அதிர்ச்சி தகவல்!

உலகையே உலுக்கிய பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல்.. அடுத்த டார்கெட் இதுதான் -வெளியான அதிர்ச்சி தகவல்!

இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த ரின்சன் ஜோஸ் (37) மேற்படிப்பிற்காக சில வருடங்களுக்கு முன் நார்வேக்கு சென்றுள்ளார். பல்கேரியாவில் Norta Global என்ற நிறுவனத்தைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

 கேரள நபருக்கு தொடர்பா ?

மேலும் இவரின் இந்த நிறுவனம்தான் பேஜர்களை விநியோகித்ததில் முக்கிய பங்கு வகித்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில் லெபனானில் நடந்த சம்பவத்தில் வெடித்த பேஜர்கள் பல்கேரியாவில் இருந்து ஏற்றுமதியோ, இறக்குமதியோ செய்யவில்லை என்றும் அவை பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டதும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

kerala

அந்த நிறுவனமோ, அதன் உரிமையாளரோ அந்த பேஜர்களை வாங்கியதற்கோ, விற்றதற்கோ எவ்வித பரிவர்த்தனையையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் ஜோஸ் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து பணிக் காரணமாக வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளார் என்றும் அவரை தொடர்புகொள்ளவே இயலவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.