உக்ரைக்கு சென்ற இந்திய ஆயுதங்கள்? ரஷ்யா கொடுத்த எச்சரிக்கை - அலறும் உலக நாடுகள் !
ஒரு நாடு ஆயுதங்களை வாங்கினால் அந்த குறிப்பிட்ட நாடு மட்டுமே அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.
இந்திய ஆயுதங்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது.ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் போரால் இது வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் வரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய ஆயுத நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கு விற்ற சில ஆயுதங்களை உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா அமைதி காத்து வந்தது.
இதற்கிடையே தற்பொழுது இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்குச் சென்றுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதால் இந்தியா மீது ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது. கடந்த ஓராண்டாகவே ரஷ்யா தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் இந்திய ஆயுதங்களை அனுப்பி உள்ளதே பேசுபொருள் ஆகியுள்ளது. பொதுவாகப் போரின் போது ஒரு நாடு ஆயுதங்களை வாங்கினால் அந்த குறிப்பிட்ட நாடு மட்டுமே அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது .
ரஷ்யா எச்சரிக்கை
இந்த நடவடிக்கையில் இந்திய ஆயுத ஏற்றுமதி விதிமுறைகள் தெளிவாக உள்ள நிலையில் அதை மீறி ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குண்டுகளை முதன்மையாக இத்தாலியின் மெக்கனிகா பெர் எல்'எலெட்ரோனிகா இ சர்வோமெக்கனிஸ்மி என்ற நிறுவனம் தான் உக்ரைனுக்கு அதிகளவில் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவிலிருந்து காலி குண்டுகளை வாங்கி வெடிமருந்துகளை நிரப்பும். இப்போது அதை அவர்கள் உக்ரைனுக்கு அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.