ஒரே நேரத்தில் 30 அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை; உண்மை இதுதான்..அதிபர் விளக்கம்!

North Korea World
By Swetha Sep 04, 2024 01:30 PM GMT
Report

30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அதிகாரிகள்

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரே நேரத்தில் 30 அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை; உண்மை இதுதான்..அதிபர் விளக்கம்! | 30 Officials Got Death Sentenced By Kim Jong Un

மேலும் தொடர் கனமழையால் வடமேற்கு நகரமான சினுய்ஜு மற்றும் அண்டை நகரமான உய்ஜுவில் 4,100 வீடுகள், 7,410 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பல பொது கட்டிடங்கள், கட்டமைப்புகள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனையடுத்து, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் இறப்பைத் தடுக்கத் தவறியதற்காக சுமார் 30 அரசாங்க அதிகாரிகளுக்கு மரணதண்டனை விதித்ததாக கூறப்படுகிறது. சாகாங் மாகாணத்தைத் தாக்கிய கனமழை மற்றும் நிலச்சரிவுகளார் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அதுமட்டுமின்றி, பலர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 15,400 பேருக்கு தலைநகர் பியோங்யாங்கில் அரசு சார்பில் தற்காலிக தங்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றியும் அவ்வளவு பெண்கள்; மேடையில் கதறி அழுத வடகொரிய அதிபர் - அவரின் கோரிக்கை..?

சுற்றியும் அவ்வளவு பெண்கள்; மேடையில் கதறி அழுத வடகொரிய அதிபர் - அவரின் கோரிக்கை..?

திடுக்கிடும் காரணம்

இதனிடையே கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட வடகொரிய அதிபர், அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கப்படும் என கூறியிருந்தார்.

ஒரே நேரத்தில் 30 அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை; உண்மை இதுதான்..அதிபர் விளக்கம்! | 30 Officials Got Death Sentenced By Kim Jong Un

இந்த நிலையில், வெள்ளப் பாதிப்பை தடுக்கத் தவறிய 30 அதிகாரிகளுக்கு கடந்த மாத இறுதியில் வடகொரிய அதிபர் மரண தண்டனை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தி

வெளியிட்டுள்ள தென்கொரிய ஊடகம், கடந்த மாத இறுதியில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 20 முதல் 30 அதிகாரிகள் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் `வெள்ளத்தால் மூழ்கிய பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும், மீட்டெடுக்கவும் பல மாதங்கள் ஆகும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட 15,400 பேருக்கு நிவாரண முகாம்களில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், வட கொரியாவின் நற்பெயரை சேதப்படுத்த, வேண்டுமென்றே தூக்கு தண்டனை போன்ற அவதூறான வதந்திகளை தென் கொரியா பரப்புகிறது" என்று கூறியுள்ளார்.