ட்ரம்ப் மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி - பரப்புரை செய்யவிருந்த இடத்தில்.. மிரண்டுபோன போலீஸ்!
டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகிலிருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது .இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெறு வரும் நிலையில் பரப்புரையின் போது குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இருமுறை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டது .
இந்த நிலையில், நியூயார்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் அருகில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
வெடிபொருட்கள்
ஏற்கனவே அமெரிக்கா, ஃபுளோரிடா மாகாணத்தின் உள்ள கோல்ஃப் கிளப்பில், நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.மேலும், இந்த சம்பவம் குறித்துச் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக டொனால்ட் டிரம்ப் மீது நடந்த கொலை முயற்சிக்குக் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோரது பேச்சுக்களே காரணம் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.