உலகையே உலுக்கிய பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல்.. அடுத்த டார்கெட் இதுதான் -வெளியான அதிர்ச்சி தகவல்!

Cyber Attack Israel World
By Vidhya Senthil Sep 21, 2024 07:37 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

பேஜர், வாக்கி டாக்கி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில்,அடுத்து செல்போன் மூலமும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பேஜர்  தாக்குதல்

1945-ஆம் ஆண்டு ஜப்பான் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல், 2011-ல் அமெரிக்கா இரட்டைக் கோபுர தாக்குதல் ஆகியவை மக்கள் மத்தியில் நீங்காத நிலையில்,தற்போது லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி மூலம் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

உலகையே உலுக்கிய பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல்.. அடுத்த டார்கெட் இதுதான் -வெளியான அதிர்ச்சி தகவல்! | Israel Attack Can Make A Cell Phone

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த ‘டிவைஸ் வெடிப்புத் தாக்குதல்’ சம்பவங்களில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏறத்தாழ 3,000 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சதிச் செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சூழலில் பேஜர்கள் எப்படி வெடித்தன என்பது தொடர்பாகப் பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1000 பேஜர்களை வெடிக்கவைத்து கொடூரம்; 3000 பேர் காயம்!

1000 பேஜர்களை வெடிக்கவைத்து கொடூரம்; 3000 பேர் காயம்!

பேஜர்கள் உற்பத்தி செய்யும் இடத்தில இருந்து பெறப்பட்டு அதனுள் வெடிபொருள்களை வைத்து வெடிக்க செய்யலாம் ரேடியோ அலைவரிசைகளை ஹேக் செய்து, குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் அனுப்பி பேஜர் பேட்டரிகளை, சூடாக்கி வெடிக்கச் செய்திருக்கலாம்.

அடுத்த டார்கெட் 

அப்படி இணையத் தொடர்பே இல்லாத பேஜர் போன்ற Low level கருவிகளை வெடிக்கச் செய்யும்போதே ஜிபிஎஸ், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து வித தொடர்புகளையும் உடைய செல்போன் போன்ற High level கருவிகளையும் வெடிக்கச் செய்ய முடியும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

mobile phone

குறிப்பாக செல்போன் ஒரே இடத்தில் அதன் பொருள்கள் தயாரிக்கப்படுவதில்லை. இதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை இணைத்து ஒரே இடத்தில் விற்பனைக்காக வருகிறது.

எனவே, செல்போன் மூலம் தாக்குதல் நடத்த வேண்டும் என எந்த அமைப்பு திட்டமிட்டாலும், அவற்றில் வெடிப்பொருட்களை வைத்தோ, சாஃப்ட்வேர்கள் மூலமோ தாக்குதல் நடத்த வாய்ப்புண்டு என வல்லுநர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.