சல்மான்கானை கொல்ல துடிக்கும் கும்பல்..1998-ல் செய்த தவறு- பகீர் பின்னணி!

Salman Khan Mumbai Gun Shooting
By Vidhya Senthil Nov 08, 2024 06:41 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சல்மான் கான்

மஹாரச்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போக்குவரத்து காவல் துறைக்கு வியாழன் (நவ.7) அன்று மர்ப நபர் ஒருவர் அழைத்துள்ளார். அப்போது லாரன்ஸ் பிஷ்னோய்வின் சகோதரர் பேசுவதாகக் கூறியுள்ளார். பிஷ்னோய் சமூகத்தினரின் கோவிலுக்குச் சென்று நடிகர் சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

இல்லாத பட்சத்தில் 5 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் சல்மான்கான் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் என இருவரையும் தொடர்புப்படுத்தி உருவாகியுள்ள பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பாடலின் பாடலாசிரியர் இதற்கான பின்விளைவுகளை ஒரு மாத காலத்துக்குள் எதிர்கொள்வார் என மிரட்டல் விடுத்துள்ளார்.

நடிகையின் ஆடையை கடித்து இழுத்த சல்மான் கான் - இணையத்தில் வைரலான வீடியோவால் அதிர்ச்சி

நடிகையின் ஆடையை கடித்து இழுத்த சல்மான் கான் - இணையத்தில் வைரலான வீடியோவால் அதிர்ச்சி

இந்த நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் சல்மான் கானை கொண்டுவிடுவோம் என என மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்ற போது அரிய வகை மானான கலைமானை வேட்டையாடியதாக எழுந்த விவகாரத்தில் சல்மான்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது.

 கொலை மிரட்டல் 

கடந்த ஏப்ரல் மாதம் சல்மான்கானின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாந்த்ராவை சேர்ந்த அசாம் அகமது என்பவரையும் ,நொய்டாவை சேர்ந்த குர்ஃபான்ன் கான் என்பவரையும் காவல்துறை கைது செய்தது .

லாரன்ஸ் பிஷ்னோய்

இந்த நிலையில் நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.