சட்டசபையில் கைகலப்பு - பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

BJP India Jammu And Kashmir
By Karthikraja Nov 07, 2024 08:00 AM GMT
Report

காஷ்மீர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, கடந்த 2010 ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 

omar abdullah

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி ஒமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றார்.

சிறப்பு அந்தஸ்து தீர்மானம்

ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி அம்மாநில சட்டசபையில் நேற்று (06.11.2024) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதலும் அளித்தார். 

jammu kashmir assembly clash

பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாள் முழுவதும் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சட்டசபை மீண்டும் கூடி சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்கப்பட்டது. 

கைகலப்பு

அப்போது அவாமி இத்தி ஹாத் கட்சி எம்.எல்.ஏ குர்ஷித் அகமது ஷேக், சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வகையில் எழுதப்பட்டிருந்த பதாகை ஒன்றை காண்பித்தார். அதற்கு பாஜக எம்.எல்.ஏக்கள் ஓடி வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பதாகையை பிடிங்கி கிழித்தனர். 

இதனால் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இதனையடுத்து, அவை காவலர்கள் வரவழைக்கப்பட்டு அமளியில் ஈடுப்பட்ட உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து அவை சிறுது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.