நடிகையின் ஆடையை கடித்து இழுத்த சல்மான் கான் - இணையத்தில் வைரலான வீடியோவால் அதிர்ச்சி
பொதுமேடையில் நடிகையின் ஆடையை நடிகர் சல்மான் கான் கடித்து இழுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பொதுவாக இந்திய திரையுலகைச் சார்ந்த நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் போன்ற விழாக்களில் ஜோடியாக இணைந்து நடனமாடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடந்த எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை பூஜா ஹெக்டேவும் இணைந்து நடனமாடினர்.
தமிழில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பூஜா ஹெக்டே அந்நிகழ்ச்சியில் சல்மான் கானுடன் இணைந்து கிக் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடிய நிலையில் பாடல் முடிந்ததும் சல்மான் கான் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதாவது மேடையில் பூஜா ஹெக்டேவை நிற்க சொல்லி அவரது ஆடையின் பின்பக்கத்தை சல்மான்கான் கடித்து இழுத்தார். கிக் பாடலில் உள்ள நடன அசைவை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக அவர் அப்படி செய்த நிலையில் பொது இடத்தில் சல்மான் கான் அப்படி நடந்து கொண்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில் சல்மான்கானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Don't miss to watch till the end #SalmanKhan and #PoojaHedge ?? #Expo2020Dubai pic.twitter.com/OYdXUJ16Ie
— Devil V!SHAL (@VishalRC007) February 26, 2022
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil