உலகின் கடைசி சாலை இங்கேதான் இருக்கு - பலருக்கும் தெரியாத தகவல்!

Norway
By Sumathi Aug 21, 2024 01:45 PM GMT
Report

உலகின் கடைசி சாலை குறித்து எத்தனை பேருக்கு தெரியும்?

நார்வே

ஐரோப்பா கண்டத்தில் அமைந்திருக்கும் நாடு நார்வே. இங்குள்ள E- 69 நெடுஞ்சாலை தான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

E- 69 Highway

வட துருவத்திற்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலை இது என்பதால் பூமியின் கடைசி சாலையாக கூறப்படுகிறது. இவற்றில் மிக நீளமான சுரங்கப்பாதை ‘நார்த் கேப்’. 6.9 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளது.

இந்த நாட்டை விட்டு வெளியேறுவோருக்கு உதவி தொகை - எங்கு, ஏன் தெரியுமா?

இந்த நாட்டை விட்டு வெளியேறுவோருக்கு உதவி தொகை - எங்கு, ஏன் தெரியுமா?

 E- 69 நெடுஞ்சாலை

நோர்க் ஆப்-ஐ நார்வேயில் உள்ள ஓல்டேஃபேவுர்ட் என்ற கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை 129 கிலோ மீட்டர் தொலைவைக் கொண்டுள்ளது. பூமத்தியரேகைக்கு மேலே இந்த சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் காற்று பயங்கர வேகத்தில் வீசும்.

உலகின் கடைசி சாலை இங்கேதான் இருக்கு - பலருக்கும் தெரியாத தகவல்! | Last Road In The World Details

கோடைக்காலத்தில் கூட இந்த சாலையில் பனி பொழியும். வானிலை முன்னறிவிப்புகள் இந்தப் பகுதியில் வேலை செய்யாது என்பதால் எந்த நேரத்திலும் இயற்கை சீற்றம் ஏற்படலாம் என புவியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இங்கு தனியாகச் செல்ல ஒருவரும் அனுமதிக்கப்படுவதில்லை. 1934ல் அமைக்கப்பட்ட இந்த நீண்ட சாலை முழுமை பெற 62 ஆண்டுகளாகியுள்ளது. அதன்பின் 1992ல் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.