இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் இது தான் - இங்கிருந்தே வெளிநாட்டிற்கே செல்லலாம்!
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?
கடைசி ரயில் நிலையம்
நேபாளத்திற்கு மிக அருகில் பீகாரில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து இறங்கி நடந்தே நேபாளத்திற்கு பயணம் செய்யலாம். அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் ஜோக்பானி என்று அழைக்கப்படுகிறது.
இதுதான் நாட்டின் கடைசி நிலையமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய மக்களுக்கு நேபாளம் செல்ல விசா, பாஸ்போர்ட் கூட தேவையில்லை. மற்றொரு நாட்டின் எல்லை தொடங்கும் மற்றொரு ரயில் நிலையம் ஒன்று உள்ளது.
சிங்காபாத்
மேற்கு வங்கத்தின் சிங்காபாத் ரயில் நிலையமும் நாட்டின் கடைசி நிலையமாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த நிலையம் கொல்கத்தாவிற்கும் டாக்காவிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த ரயில் நிலையம் தற்போது சரக்கு ரயில்களின் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரயில்நிலையம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இருந்து வருகிறது. இங்கு அட்டைப் பயணச் சீட்டுகளை காணலாம். இது தவிர, சிக்னல்கள், தகவல் தொடர்பு மற்றும் நிலையம்,
தொலைபேசி மற்றும் டிக்கெட் தொடர்பான அனைத்து உபகரணங்களும் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்தவைதான். தென்னிந்தியாவின் கடைசி ரயில் நிலையம் கன்னியாகுமரி ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.