உலகின் கடைசி நகரம் இதுதான்! சுற்றிலும் மலை மற்றும் கடல் - பலருக்கும் தெரியாத தகவல்
உஷுவாய் (Ushuaia) என்ற நகரம் தான் பூமியின் கடைசி நகரம் என்று அழைக்கப்படுகிறது.
கடைசி நகரம்
பூமி உருண்டையாக இருப்பதால் அதற்கு உண்மையான முடிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், உலகின் கடைசி பகுதியை புவி விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் அர்ஜென்டினாவில் உள்ள உஷுவாய் (Ushuaia) தான் பூமியின் கடைசி நகரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிறிய நகரம் கரடுமுரடான மலைகள் மற்றும் கரடுமுரடான கடல்களால் சூழப்பட்டுள்ளது. 23 சதுர கி.மீ.பரப்பளவு கொண்ட உஷுவாய் நகரத்தின் தற்போதைய மக்கள் தொகை 57,000 ஆகும்.
பழங்குடியினர்
மேலும், மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள இந்த நகரம் வடக்கே மாகெல்லன் ஜலசந்தியும், தெற்கே பீகிள் கால்வாயும், 2 பெருங்கடல்களையும் இணைக்கின்றன. தென் துருவத்திற்கு செல்லும் அனைத்து கப்பல்களும் இங்கிருந்து புறப்படும்.
இந்த நகரத்தில் கோடையில் கூட சில நேரங்களில் வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், சில நேரங்களில் 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இங்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு யாகலேஸ் பழங்குடியினர் வாழ்ந்தனர். உஷுவாய் நகரத்தின் முதல் கட்டிடமான சலுசியான் தேவாலயம் இன்றும் உள்ளது.