185 பேர் கொண்ட ஒரே குடும்பம் - 6 தலைமுறையாக ஒன்றாகவே வசிக்குறாங்களாம்..
6 தலைமுறையாக இந்திய குடும்பம் ஒன்று ஒன்றாக வசித்து வருகிறார்கள்.
6 தலைமுறை
ராஜஸ்தான், அஜ்மீரில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. அங்கு மொத்தம் 185 பேர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பேர்டிசந்த் என்பவரின் தந்தை, கேட்டுக்கொண்டதால் தனது முழு குடும்பத்தையும் இந்த வழியில் ஒன்றாக வைத்திருந்ததாக கூறுகிறார்கள்.
இவர்கள் வருமானத்திற்காக தங்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து தானியங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிடுகின்றனர். ஒரு அடுப்புக்குப் பதிலாக, 13 அடுப்புகளில் உணவு சமைக்கப்படுகிறது.
பெரிய குடும்பம்
தினமும் 40 கிலோ காய்கறிகளும், 50 கிலோ கோதுமை மாவும் தேவைப்படுகிறதாம். இவர்களது வீட்டின் ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய்.
உறுப்பினர்களுக்குச் சொந்தமான சுமார் 80 பைக்குகள் வீட்டின் வெளியே நிறுத்தப்படுகின்றன. இங்கு ஆறு தலைமுறை மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.