தமிழகத்தில் புதிதாக உருவாகும் 7 மாவட்டங்கள் - எதெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மாவட்டங்கள்
1956 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டபோது 13 மாவட்டங்கள் இருந்தன. இந்தியா சுதந்திரத்தின் போது மெட்ராஸ் பிரசிடென்சி 26 மாவட்டங்களைக் கொண்டிருந்தது.
தற்போது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் தென்காசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
விரைவில் அறிவிப்பு?
மேலும் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் மாவட்டங்களையும் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை எற்று பரிசீலனை நடைபெற்ற நிலையில்,
தற்போது புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, அரணி, விருத்தாசலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட உள்ள மாவட்டங்களாக இடம்பெற்றுள்ளன.
இதற்கான அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் அறிவிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.