அடுத்த தலைமுறைக்கு தயாராகும் இந்தியா : 5 ஜி தொழில் நுட்பத்தால் இவ்வுளவு பயன்களா?
தற்போது மாறிவரும் புதிய தொழில்நுட்ப உலகில் இஇந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தே வருகின்றன , ஆகவே இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் வரும் என கூறப்பட்ட நிலையில் மெடாவெர்ஸ் மற்றும் 5ஜி தொழில்நுட்பம் ஆகிய இரண்டையும் சார்ந்து தான் அமையும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
5ஜி தொழில்நுட்பம்
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவின் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் 2002-23 ஆம் ஆண்டுக்கான 5ஜி மொபைல் சேவைகளை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் தற்போது ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறுகிறது
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடஃபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன
இந்த ஏலத்தில் 600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ், 2500 மெகா ஹொ்ட்ஸ், 3300 மெகாஹொ்ட்ஸ் மற்றும் 26 கிகாஹொ்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5 ஜி தொழில் நுட்பம் குறித்த சில தகவல்களை காண்போம்
5ஜி என்றால் என்ன?
5ஜி என்பது தொலைத்தொடர்பு இணைய இணைப்பின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம். இது, மிக விரைவாக தரவிறக்க, பதிவேற்ற வழி செய்கிறது. மேலும் ஒரே நேரத்தில் அதிக சாதனங்கள் தொலைத் தொடர்பு இணையத்தை அணுக அனுமதிக்கிறது.
5ஜி எவ்வாறு செயல்படுகிறது
அதாவது 5ஜி- 30-300 கிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் , 4ஜி- 2-8 கிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் இந்த மில்லிமீட்டர் அதிர்வெண் பயன்படுத்துவதால் 5G தொழில்நுட்பம் 4G-ஐ விட 10 மடங்கு அதிக அலைவரிசை கொண்டிருக்கும்.
இதனால் இதன் வேகமும் அதிகரிக்கும். 5ஜி தொழில்நுட்பத்தை வாகனங்களில் புகுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.
அதுமட்டுமின்றி இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' எனப்படும் பொருள்களுக்கான இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரங்களின் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அதுமட்டுமின்றி, வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.
மேலும் 5ஜி யில் இருக்கும் நெட்வோர்க் ஸ்ப்லைசிங் (Network Splicing) மூலம் ஒரே நெட்வோர்க்கை பிரித்து பல நெட்வோர்க் ஆக பயன்படுத்த முடியும். இதன்மூலம் டேடிகேட்டட் லையன் வசதியை எளிதில் பெற முடியும்.
அத்துடன் பாதுகாப்பு ஒரு குறிப்பிட்ட தரவுகளை அனுப்ப இந்த முறையை பயன்படுத்தலாம். அதே போல் , தொலைதூர அறுவை சிகிச்சை முறை, ஆளில்லா கார்கள், ராணுவ பயன்பாடுகள் போன்ற உயர்நிலை பயன்பாடுகளை எளிதாக்க முடியும்.
இதுவரை அலைகற்றை ஏ;லத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே 5ஜி ஏலம் கேட்க போட்டியில் இருந்த நிலையில் தற்போது அதானியின் நிறுவனமும் நுழைந்துள்ளதால் போட்டி மிகவும் கடுமையாக உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அதானி நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றால் தொலைத்தொடர்பு சேவையில் கூடுதலாக ஒரு நிறுவனம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதற்கு அதானி ஒரு முக்கிய காரணமாக உள்ளார் என கருதப்படுகிறது. இந்த ,ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உரிமையை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.