எவ்ளோ வக்கிரம் இருக்கும்? கேவலமா இல்லையா? ராஷ்மிகாவை விளாசிய பிரபல நடிகை!

Rashmika Mandanna Bollywood Ranbir Kapoor Lakshmy Ramakrishnan
By Sumathi Feb 04, 2024 02:30 PM GMT
Report

அனிமல் படம் குறித்த ஆதங்கத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் கொட்டித் தீர்த்துள்ளார்.

அனிமல்

பாலிவுட்டில் ரன்பீர் கபூர் - ராஷ்மிகா நடித்த திரைப்படம் அனிமல். கடுமையான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விமர்சனங்களை பகிர்ந்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன்,

rashmika

”அனிமல் படத்தைப் பார்த்தேன். வக்கிரத்தின் உச்சம்னுதான் சொல்லணும். சமூகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தினந்தினம் நடந்துட்டு வருது. இப்படியொரு சூழலில், ஆணாதிக்கத்துடனும் அதிக வன்முறையுடனும் பிற்போக்குத்தனம் நிறைந்த படமா எடுக்கப்பட்டிருக்கு.

58 வயதில் எனக்கே அந்த தொல்லை.. இயக்குநர் துரத்தினார் - லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர்!

58 வயதில் எனக்கே அந்த தொல்லை.. இயக்குநர் துரத்தினார் - லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர்!

விளாசிய நடிகை

ஒரு பாலியல் தொழிலாளி அல்லது ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்னையைப் பற்றி படம் எடுக்கிறோம்; பேசுகிறோம் என்றால் தவறில்லை. ஆனால், அதை எப்படி காண்பிக்கிறோம், அந்தப் படத்திற்கு, அந்த திரைக்கதைக்கு, அந்தக் காட்சி அவசியமா? அந்தக் காட்சியை எப்படி படமாக்கிறோம் என்பது முக்கியம்.

lakshmi-ramakrishnan

ராஷ்மிகா முன்னணி நடிகையா இருக்காங்க. நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா, அவங்கள மாதிரி நடிகை இந்தப் படத்துல நடிக்கும்போது தவறான கருத்துகள் இன்னும் மக்களைப் போய்ச் சேரும். பெண்களை சிறுமைப்படுத்தும் இதுபோன்ற கதைகளில் நடிக்க ராஷ்மிகா யோசிக்கவேண்டும். இந்தமாதிரி கேவலமான படத்துல பெண்களும் நடிக்க ஒகே சொல்லிடறாங்க. மக்களும் பார்த்து வெற்றியடைய வைக்குறாங்க.

அனைவரும் ஒன்றிணைந்து எங்கக் குழந்தைகளுக்கு இந்தமாதிரி படம் வேண்டாம்னு நினைச்சு புறக்கணிச்சா, எவனும் வக்கிர புத்தியோட படம் எடுக்கமாட்டான். குடும்பத்துடன் வந்து பார்த்து மகிழ்ந்து ரசிக்கும்படி படம் எடுக்கணும். ஆனா, இந்தமாதிரி படத்தையெல்லாம் பார்த்தா வக்கிரப் புத்திதான் சமூகத்துல உருவாகும். இளம் தலைமுறையினர் தவறான வழிக்குத்தான் செல்வார்கள். படத்தைப் பார்த்துட்டுப் படுத்தா, இரவுல கேவலமான கனவுகள்தான் வருது எனத் தெரிவித்துள்ளார்.