இதனால்தான் பார்ப்பனீயம், பார்ப்பனர்களை அட்டாக் பண்றாங்க - கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

Lakshmy Ramakrishnan
By Sumathi Feb 13, 2023 10:27 AM GMT
Report
165 Shares

திருச்சி கல்யாணராமன் பேச்சுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் 

கோவையில் நடந்த பிராமணர்கள் மாநாட்டில் ரங்கராஜன் பாண்டே, பாஸ்கி, திருச்சி கல்யாணராமன் உள்பட பலரும் பேசி உள்ளார்கள். இதற்கு நடிகை லட்சு ராமகிருஷ்ணன் இந்த மாநாட்டில் திருச்சி கல்யாணராமன் பேசிய ஃபுல் வீடியோவையும் என்னால் பார்க்க முடியவில்லை.

இதனால்தான் பார்ப்பனீயம், பார்ப்பனர்களை அட்டாக் பண்றாங்க - கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | Actress Lakshmi Ramakrishnan About Brahmins

இந்திரா காந்தி பற்றி பேசி இருக்கிறார். பரமாச்சாரியார் குறித்து பேசும் போது கிணத்துக்கு அந்தப் பக்கம் அவரை உட்கார வச்சாங்க. ஏனென்றால் சிகை எடுக்காத ஸ்த்ரீ அவங்க என்று கூறி இருக்கிறார். என்ன பேச்சு இது? இதனால்தான் பார்ப்பனீயத்தையும் பார்ப்பனர்களையும் அட்டாக் பண்றாங்க. சக மனிதனை மனிதனாக மதிக்காத நீ அப்படி என்ன புத்திசாலி.

கண்டனம் 

என்னத்த சுப்ரீம். இவர்களுக்கு மட்டும் என்ன அப்படி பெரிய மூளை. முதலில் மூளை இருக்கிறவங்க இப்படி பேசுவாங்களா? இதைவிட ஒரு வயலன்ஸ் இருக்க முடியுமா? இந்த மைண்ட் செட்டில் இருப்பதால தான் இன்னமும் இந்த சொசைட்டியில இன்டெகரேட் செய்ய முடியல. கல்யாண ராமன் மாதிரி ஆட்கள் இப்படி பேசுவதால்தான்.

அந்த அழுக்குநாலதான் இந்த பின்புலத்திலிருந்து வராதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள். இன்றைக்கு நாம் இதையெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருந்து விட்டால் வரும் தலைமுறை ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாக இருக்கும். கல்யாணராமன் பேசினது ரொம்ப கண்டிக்க வேண்டியது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.