இப்படியாமா பண்ணுவீங்க.. விருதை கேட்டு வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் - என்ன நடந்தது?

Tamil nadu Indian Actress
By Sumathi Sep 05, 2022 07:41 AM GMT
Report

விருதுக்கான பட்டியலில் லட்சுமி ராமகிருஷ்ணன் பெயர் விடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசின் திரைப்பட விருது

கடந்த 2017 ஆம் ஆண்டு, 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளுக்கும் அதன் கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இப்படியாமா பண்ணுவீங்க.. விருதை கேட்டு வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் - என்ன நடந்தது? | Lakshmi Ramakrishnan Name Missing On Tn Awards

ஆனால் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவில்லை. தற்போது, தமிழக அரசு அந்த விழாவை நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடத்தி விருதுகள் வழங்கி கலைஞர்களை கௌரவப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா பாபு ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

இதற்கிடையில் 2011 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது பட்டியலில் உச்சிதனை முகர்ந்தால் படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக வருகை தந்திருந்த அவரது பெயர் விருதுக்கான பட்டியலை அறிவிக்கும் போது இடம் பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேள்வியெழுப்பினார்.

பரபரப்பு 

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி, லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பட்டியலில் விடுபட்ட பெயர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு விருது வழங்கினர்.

அடஹ்னையடுத்து, லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மதிப்புமிக்க தமிழ்நாடு அரசின் மாநில விருது கிடைத்தது. முதலமைச்சர், நடுவர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு நன்றி.

இன்னும் சிலருடன் எனது பெயர் விடுபட்டது. அந்த நேரத்தில் அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளர்கள் குழு காணாமல் போன பெயர்களை விரைவாகக் கண்டுபிடித்தது என தெரிவித்துள்ளார்.